×

காலி மைதானத்தில் கிடந்த ஷூட்டிங் வெடிகுண்டால் பரபரப்பு

சென்னை: சென்னை சாலிகிராமம் பிரபல தனியார் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் ேநற்று முன்தினம் இரவு நாட்டு வெடி குண்டுகள் போல் 2 கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் உடன் சம்பவம் இடத்திற்கு சென்று 2 குண்டுகளை கைப்பற்றி  ஆய்வு செய்தனர். அப்போது அது நாட்டு வெடி குண்டுகள் கிடையாது என்றும் சினிமா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் கலர் வெடி குண்டு என தெரியவந்தது.  இந்த வெடி குண்டால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் பொது இடத்தில் ஷூட்டிங் வெடி கண்டுகளை வீசி ெசன்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post காலி மைதானத்தில் கிடந்த ஷூட்டிங் வெடிகுண்டால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Galli Maidan ,Saligramam, Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...